தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்மா உணவக ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு

அம்மா உணவக ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு

அம்மா உணவக ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு


ADDED : ஜூலை 26, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி, அம்மா உணவக பணியாளர் நலச்சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில தலைவர் மகேந்திர குமார் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார். மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். அம்மா உணவக பணியாளர் சங்க மாநில தலைவி செல்வி தலைமை வகித்தார். அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் மகேந்திர குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தை உணவு தயாரிப்பதற்கான அனுமதியை அம்மா உணவகங்களுக்கு வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை தயாரிக்கும் பணியையும் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். அம்மா உணவக ஊழியர்கள் தினக்கூலியாக, 20 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை ஊதியமாக, 18,500 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அனைத்து அம்மா உணவகங்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us