ADDED : நவ 25, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சமூக நலத்துறையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்களின் முதலீட்டு பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பய-னாளி மற்றும் தாயின் புகைப்படம், ஒரு ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லையுடன் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்-டார வளர்ச்சி அலுவலகத்தில், சமூக நலத்துறை கள பணியாளர்-களை அணுக வேண்டும்.
இன்று பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் தினமாக அனுசரித்து இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த
பயனாளிகள் பயன்பெற, கலெக்டர் ராஜகோபால்
சுன்கரா கேட்டு கொண்டுள்ளார்.