/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற மாநில தொழிலாளர் விபரம் சேகரிக்க முகாம்
/
பிற மாநில தொழிலாளர் விபரம் சேகரிக்க முகாம்
ADDED : நவ 23, 2024 01:36 AM
பிற மாநில தொழிலாளர்
விபரம் சேகரிக்க முகாம்
ஈரோடு, நவ. 23-
ஈரோடு மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை தொழிலாளர் துறை வலைதளத்தில் பதிய வேண்டும். இதற்காக வரும், 26 முதல் டிச., 24 வரை முகாம் நடக்கிறது. தொழிலாளர் துறை வலைதளமான, https://labour.tn.gov.in ல் பதிய வேண்டும்.
26ல் ஈரோடு ஆர்.கே.வி., சாலை, 28 ல் பெருந்துறை சாலை, டிச., 3ல் கொடுமுடி, 6ல் திண்டல், 9 ல் பவானி, 12ல் பெருந்துறை, 18 ல் கோபி, 24ல் சத்தியமங்கலத்தில் அந்தந்த பகுதி உதவி ஆய்வாளர்கள் மூலம் முகாம் நடத்தப்படுகிறது. நிறுவன உரிமையாளரின் பான் மற்றும் ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நிறுவன பெயர், முகவரி, புலம் பெயர் தொழிலாளரின் ஆதார், தொலைபேசி எண் எடுத்து வர வேண்டும்.