/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியல் கொடுமைக்கு எதிராக பிரசாரம்
/
பாலியல் கொடுமைக்கு எதிராக பிரசாரம்
ADDED : டிச 19, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பிரசாரம், பேரணி, அயோத்தியாப்பட்டணம் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நடந்தது.
திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமை வகித்தார். அதில் வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர், சமுதாய வள பயிற்றுனர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பெண்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி, அப்பகுதியில் நெடுஞ்சா-லையில் பேரணியாக சென்றனர்.

