/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்
/
கஞ்சா, சாராய வழக்கு; 20 பேருக்கு குண்டாஸ்
ADDED : டிச 31, 2025 05:39 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா, கள்ள சாராய வழக்குகளில் சிக்கிய, 20 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்-ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபியில் மது-விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு செயல்படுகிறது. இந்-தாண்டில் நேற்று வரை இவ்விரு ஸ்டேஷன்க-ளிலும் சாராயம், சாராய ஊறல் வைத்திருந்த-தாக, 10 வழக்குகள் பதிவு செய்து, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஐந்து பேர் குண்டாசில் சிறையில் அடைக்-கப்பட்டுள்ளனர். கஞ்சாவை பொறுத்தவரை ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில், 104 வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்றதாக, 122 வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோபி மதுவிலக்கு போலீசில் கஞ்சா விற்றதாக, 34 வழக்கு; சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்-றதாக, 386 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கஞ்சா விற்றதாக, 15 பேர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரி-வித்தனர்.

