sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி துவக்கம்

/

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி துவக்கம்

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி துவக்கம்

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி துவக்கம்


ADDED : டிச 31, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, ஈரோடு அவல்பூந்துறை சாலை ஏ.எம்.மஹாலில் நேற்று துவங்கியது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக இக்கண்-காட்சி விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது. ஜன., 12 வரை தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடத்தப்படுகிறது. ஈரோடு, சேலம், திருப்பூர் உட்பட, 17 மாவட்ட கைத்தறி நெச-வாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ ஆப்டெக்ஸ், நெசவாளர் சேவை மையம், பூம்புகார் விற்பனை நிலையம், காதி கிராம தொழில் வாரியம் உட்பட பல அமைப்பினர், இங்கு ஸ்டால் அமைத்துள்-ளனர். போர்வை, படுக்கை விரிப்பு, ஜமக்காளம், மேட், தண்டு, கோரா சேலைகள், பட்டு ரகங்கள், சர்ட்டிங், வேட்டி, பல்வேறு ஜவுளி ரகங்கள் உள்-ளன. 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.சட்டப்படி நடவடிக்கை

கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், நிருபர்களிடம் கூறியதா-வது:

கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரம் காக்கும் வகையில், விழாக்களின்போது போடப்படும் கண்காட்சி விற்பனையில், 30 சதவீதம் தள்ளுப-டியை வழங்கி, அத்தொகையை அரசு வழங்கும் வகையில் திட்டமிட்டனர். சமீபத்தில் பீகாரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது போதைப் பொருட்கள் அனைத்து இடங்களிலும் உள்ளது. இதுபற்றி கவனத்துக்கு வரும்போது நட-வடிக்கை எடுப்பதுதான் முக்கியம். தமிழகத்தில் மட்டும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்-படுவது போல பலரும் பேசுகின்றனர். பா.ஜ., ஆளும் மாநிலத்தில் போதை பொருட்கள் கண்டு-பிடிக்கப்பட்டதற்கு எச்.ராஜா போன்றோர் என்ன பதில் சொல்வார்கள். திருத்தணியில் வடமாநில தொழிலாளியை தாக்கிய இளைஞர்கள் மீது சட்-டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க, தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கூறினார்






      Dinamalar
      Follow us