/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் பாலத்தில் துாங்கிய டோல்கேட் ஊழியர் பரிதாப சாவு
/
போதையில் பாலத்தில் துாங்கிய டோல்கேட் ஊழியர் பரிதாப சாவு
போதையில் பாலத்தில் துாங்கிய டோல்கேட் ஊழியர் பரிதாப சாவு
போதையில் பாலத்தில் துாங்கிய டோல்கேட் ஊழியர் பரிதாப சாவு
ADDED : டிச 31, 2025 05:37 AM
டி.என்.பாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்-டையை சேர்ந்தவர்கள் குமரகுரு, 28; தினேஷ், 34; ராஜா, 35; விக்னேஷ், 33; கார்த்திக், 32; ஐந்து பேரும் கொடிவேரி அணைக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் புறப்பட்டனர். நள்ளிரவில் கொடி-வேரி வந்தவர்கள், கொடிவேரி பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்துள்ளனர். இதில் கார்த்திக் பாலத்தின் மீதே படுத்து துாங்கி விட்டார்.
மற்ற நால்வரும் காருக்குள் துாங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது பாலத்தின் அடிப்பகுதியில் காயங்களுடன் கார்த்திக் இறந்து கிடந்தார். புரண்டு படுத்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.பலியான கார்த்திக், செங்குறிச்சி டோல்கேட் ஊழியர். திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்-ளதாக, பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.