நீட் தேர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சி.ஏ.பி.எப்., வீரர்கள்
நீட் தேர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சி.ஏ.பி.எப்., வீரர்கள்
ADDED : ஜூன் 18, 2026 04:47 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நீட் தேர்வை, 13 மையங்களில் 4,270 மாணவ, மாணவிகள் எழுத
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.ஏ.பி.எப்., வீரர்கள், 27 பேர்
இம்முறை தேர்வு மைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இளங்கலை
மருத்துவ படிப்புக்கான நடப்பாண்டு நீட் தேர்வு மே, 3ல் நடந்தது.
தேர்வு வினாத்தாள் முறைகேட்டால் தேர்வு ரத்து செய்யப்பட்டு வரும், 21ல்
மீண்டும் நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட, 13 மையங்களில் தேர்வு நடக்கிறது. மொத்தம், 4,270
பேர் எழுதுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர்
கூறியதாவது: இம்முறை 15 நிமிடங்கள் தேர்வுக்கு கூடுதல் நேரம்
வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு தலா இருவர் என, 27
சி.ஏ.பி.எப்., (சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்ஸ்) வீரர்கள் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் தலா ஒரு போலீசாரும்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வுக்கு சில மணி நேரம்
முன்னதாகவே வங்கி கருவூலத்தில் இருந்து வினாத்தாள் சி.ஏ.பி.எப்.,
போலீஸ் பாதுகாப்புடன் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு கூறினர்.
