ADDED : ஜூன் 18, 2026 04:47 AM

ஈரோடு:வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி முகாம், ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 10 தாலுகாவிலும் துவங்கியது. தாளவாடி தாலுகாவில் கலெக்டர் கந்தசாமி ஜமாபந்தியை துவக்கி வைத்தார்.
பிறகு வருவாய் கிராமங்களின் வருவாய் பதிவேடு, பயிர் சாகுபடி விபரங்கள், வரி வசூல், அளவை கருவிகள் சரிபார்ப்பு விபரம் போன்றவைகளை ஆய்வு செய்தார். மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறை கேட்டறிந்தார். இதேபோல் பவானியில் ஜமாபந்தி முகாமை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் துவக்கி வைத்தார். ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, ஜமாபந்தி பணியை மேற்கொண்டார்.
மொடக்குறிச்சி, கொடுமுடி, நம்பியூர் தாலுகாவில் நேற்று தொடங்கி, 19ம் தேதி வரையும், ஈரோடு, அந்தியூர் தாலுகாவில், 23ம் தேதி வரையும், பெருந்துறை, கோபி, சத்தி தாலுகாவில், 24ம் தேதி வரையும் (சனி, ஞாயிறு விடுமுறை நாள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) ஜமாபந்தி முகாம் நடக்கிறது.
