/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேட்டரி மின் கசிவால் தீப்பிடித்து கார் நாசம்
/
பேட்டரி மின் கசிவால் தீப்பிடித்து கார் நாசம்
ADDED : அக் 08, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால், கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ஈரோடு, ரிலையன்ஸ் மால் எதிரே, டாடாகெம் வினியோகஸ்தர் நிறுவனம் உள்ளது.
இதன் உரிமையாளர் மலைசாமி. நேற்று காலை நிறுவனத்தின் முன், 2010 மாடல், 'வோல்ஸ்வேகன்' காரை நிறுத்தியிருந்தார். காலை, 7:50 மணியளவில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.
ஈரோடு தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கார் முழுமையாக சேதமடைந்தது.
பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரிந்தது. பேட்டரியில் அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் பழுது பார்த்து ஓட்டியுள்ள நிலையில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது.