/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் மீது கார் மோதி குழந்தை பலி;மூவர் காயம்
/
பைக் மீது கார் மோதி குழந்தை பலி;மூவர் காயம்
ADDED : மே 23, 2024 06:54 AM
பெருந்துறை : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சந்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி மகன் கார்த்திக், 29. இவர் மனைவி சந்தியா, 22. கார்த்திக்கின் பெரியப்பா மகள் அமிர்தவள்ளி, 24. இவர், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மகள் கனிஷ்கா, 2, உடன் தனியே வாழ்ந்து வருகிறார். இவர்கள் அனைவரும், கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த புதுபுதுாரில் தங்கிக் கொண்டு, கட்டட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) பிற்பகலில், அரூரில் நடக்கும் அமிர்தவள்ளியின் சின்ன அண்ணன் ராஜ்குமார் திருமணத்திற்கு, கோவையிலிருந்து சொந்த ஊருக்கு கார்த்திக் ேஹாண்டா பைக்கில் சென்றனர். பைக் முன்புறம் கனிஷ்கா, பின்னால் மனைவி சந்தியா, பெரியப்பா மகள் அமர்தவள்ளி ஆகியோரை உட்கார வைத்துக் கொண்டு சென்றார்.
பெருந்துறை அடுத்த சரளை ஏரி கருப்பராயன் கோவில் அருகில் வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த கார்த்திக், சந்தியா, அமிர்தவள்ளி, குழந்தை கனிஷ்கா ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை கனிஷ்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற மூவரும் மேல் சிகிச்சைகாக, ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

