/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு
/
டூவீலர் மீது கார் மோதல்: கடலை வியாபாரி சாவு
ADDED : நவ 02, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அப்பியம்பட்டிதியை சேர்ந்தவர் சென்னிமலை, 50; நிலக்கடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வியாபார விஷயமாக காங்கேயம் வந்தார். வேலை முடிந்து ஹோண்டா யூனிகான் பைக்கில் ஊர் திரும்பினார்.
காங்கேயம் - தாராபுரம் ரோடு குள்ளம்பாளையம் அருகே நள்-ளிரவு, 11:30 மணியளவில் சென்றபோது, எதிரே வந்த டொயோட்டா கார் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.