/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாயக்கழிவை கொட்டியதாக சரக்கு வாகனம் சிறைபிடிப்பு
/
சாயக்கழிவை கொட்டியதாக சரக்கு வாகனம் சிறைபிடிப்பு
ADDED : பிப் 10, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி : சித்தோடு அருகே கங்காபுரத்தில் ஏராளமான சாய தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள வெட்டையன் காடு என்ற இடத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் சாயக்கழிவுகளை கொட்டுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாய தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதாக தகவல் கிடைக்கவே, 20க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். கழிவை கொட்டி செல்ல காத்திருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சிறைபிடித்தனர். தகவலறிந்து சித்தோடு போலீசார் சென்றனர். வாய்க்காலில் கொட்ட வந்தது, சாயக்கழிவு இல்லை என்றும், சாப்பாட்டு கழிவு என்றும் தெரிவித்தனர்.