/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விடுமுறை அளிக்காத 82 கடை, நிறுவனங்கள் மீது வழக்கு
/
விடுமுறை அளிக்காத 82 கடை, நிறுவனங்கள் மீது வழக்கு
ADDED : அக் 03, 2024 07:31 AM
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காந்தி ஜெயந்திக்காக தேசிய பண்டிகை விடு-முறை தினமான நேற்று, பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகி-றதா, பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுகிறதா அல்லது மூன்று தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்-கப்படுகிறதா, அதற்கான படிவம் சமர்பித்துள்-ளார்களா என ஆய்வு செய்தனர்.ஆய்வில், 45 கடைகளில் ஆய்வு செய்ததில், 30 கடைகள், 56 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 49, மோட்டார் நிறுவனங்கள், 5ல் 3, என, 106 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 82 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்க-ளுக்கு விடுமுறை அளிக்காதது, விதிகளை கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டது.இந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.