/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு
/
சிலை அகற்றத்தில் 22 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 06, 2026 04:19 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை முன் விநாயகர் கோவிலில் இருந்த சிலையை, எம்.எல்.ஏ., அலுவலக காம்பவுண்ட் சுவர் அருகே நேற்று முன்தினம் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர்.
நகராட்சி இடத்தில் வைத்ததாக கூறி, பணியாளர்கள் சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்படி, ஊழியர்களை அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துதல் உள்பட ஐந்து பிரிவுகளில், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க., நகர செயலாளர், இந்து முன்னணி நிர்வாகிகளும் அடங்குவர்.

