/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 14, 2024 11:18 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே, சண்டிகா தியேட்டர் அருகில், டாஸ்மாக் கடை (எண்-3511) உள்ளது. கடையை ஒட்டி பார் செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், 32, வேலை செய்கிறார். ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் வசந்த், 26; ஈரோடு, பாரதி நகர் அருண், 28; மற்றும் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த சிவா, 25, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பீர் பாட்டிலை உடைத்த வசந்த், சிவா ஆகியோர், பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ் தலையில் அடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்படவே, மற்ற குடிமகன்கள் ஓட்டம் பிடித்தனர். சதீஷ் புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

