/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா வைத்திருந்த 4 பேர் மீது வழக்கு
/
குட்கா வைத்திருந்த 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 06, 2025 02:20 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஓம் காளியம்மன் கோவில் அருகே. 10 ஹான்ஸ் பாக்கெட் வைத்திருந்ததாக, கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் விஜயலட்சுமி, 75; பி.பெ.அக்ரஹாரத்தில் பெட்டிக்கடையில் ஹான்ஸ், 15 பாக்கெட், கூல் லீப், 10 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர் குமார், 56; பி.பெ.அக்ரஹாரம், ஓம் காளியம்மன் கோவில் அருகே வாணியர் வீதியில், ஹான்ஸ்-10, விமல் பான் மசாலா-10 பாக்கெட் வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சேகர், 62, ஆகியோர் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் முள்ளாம்
பரப்பில் மளிகை கடையில் ஹான்ஸ்-10 பாக்கெட் வைத்திருந்த, கடை உரிமையாளர் பெருமாள், 40, மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* கோபி அருகே முருகன்புதுார் பகுதியில், கோபி போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, ராமச்சந்திரன், 26, என்பவர் எட்டு மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்-தனர். இதேபோல் சிறுவலுார் போலீசார், கெட்டிச்செவியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 22; கள்ளிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன், 49, ஆகியோரை, மக்களுக்கு இடையூறாக மது அருந்தியதாக கைது செய்தனர். கோபி கடைவீதி பகுதியில் சின்னபாப்பா, 62, புகையிலை பொருட்கள், 210 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்தனர். கோபி அருகே அளுக்குளியில் கடத்துார் போலீசார் சோதனையில் ஒரு மளிகை கடையில், புகை-யிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக மகேஷ்வ-ரனை கைது செய்தனர்.