/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைனான்ஸ் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
/
பைனான்ஸ் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜன 01, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைனான்ஸ் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
கோபி,கோபி அருகே கச்சேரிமேட்டை சேர்ந்தவர் பிரபாகரன், 27; கோபியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர். நிறுவன ஊழியர்கள் மோகன்ராஜ், ஆனந்தக்குமார், பாலமுருகன், ரஜ்ஜித், தீபக். நிறுவனத்தின், 21 வாடிக்கையாளர்களிடம், 20 லட்சம் ரூபாயை, ஐந்து பேரும் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து மேலாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின்படி, ஐந்து பேர் மீதும் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

