/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் விடுமுறை விடாத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
/
ஈரோட்டில் விடுமுறை விடாத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோட்டில் விடுமுறை விடாத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோட்டில் விடுமுறை விடாத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
ADDED : மே 02, 2025 02:01 AM
ஈரோடு:ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் மாதவன் அறிவுரைப்படி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயட்சுமி தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தொழிலாளர் தினமான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
மே தினத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளதா அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவத்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்பித்து முன் அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், 42 கடைகள், 45 உணவகங்கள், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில், 35 கடைகள், 45 உணவகங்கள் மற்றும் எட்டு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 88 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. 88 நிறுவன உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.