ADDED : அக் 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி வெப்பிலி ரேஷன் கடையில் இருந்து, அரிசி மூட்டைகளை ஆம்னி வேனில் அடையாளம் தெரியாத நபர் நேற்றுமுன் தினம் காலை ஏற்றுவது தொடர்பான வீடியோ வெளியானது.
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கடையில் விசாரணை நடத்தினார். இதில், 250 கிலோ அரிசி பெண் ஊழியரின் ஒப்புதலுடன் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஊழியரான வெள்ளோட்டை சேர்ந்த மல்லிகா, 45; சிறுகளஞ்சி ஆலாம்பாளையம் வாசுதேவன், 45, ஆகியோர் மீது, சி.எஸ்.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.