/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு
/
வரதட்சணை புகாரில் கணவன் மீது வழக்கு
ADDED : ஜூலை 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, ரோஜா நகரை சேர்ந்தவர் சிவசந்திர பாலன், 30; பெருந்துறை தனியார் நிறுவன ஊழியர். ஐந்தாண்டுகளுக்கு முன் மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த வினோதினி, 23, என்பவரை, வரதட்சணை வேண்டாம் என்று கூறி திருமணம் செய்துள்ளார்.
ஆனாலும் வினோதினியின் பெற்றோர், ஐந்து பவுன் நகை போட்டுள்ளனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, 10 பவுன் நகை வரதட்சணையாக வாங்கி வருமாறு, சிவசந்திரபாலன் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசில், வினோதினி அளித்த புகாரின்படி, சிவசந்திரபாலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.