/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு
/
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டிட்டோ-ஜாக் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன், 17ம் தேதி, 435 ஆசிரியர்களும், 18ம் தேதி 450 ஆசிரியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக, டிட்டோ-ஜாக் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட, 885 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மீது, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.