/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போராட்டத்தில் ஈடுபட முயன்றோர் மீது வழக்கு
/
போராட்டத்தில் ஈடுபட முயன்றோர் மீது வழக்கு
ADDED : டிச 10, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, டிச. 10-
புன்செய்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம், கால்நடைத்துறைக்கு சொந்தமான மந்தை நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாக கடை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சியினர் கடந்த, 7ல் புன்செய்புளியம்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தடுத்து நிறுத்திய போலீசார், 14 பெண்கள் உள்பட, 98 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

