/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் விற்பனை இரு பெண்கள் மீது வழக்கு
/
போதை பொருள் விற்பனை இரு பெண்கள் மீது வழக்கு
ADDED : நவ 21, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், எல்லப்பாளையத்தில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், 45, கூல் லீப், 80, விமல், 50, ஸ்வாகத் கோல்டு பாக்கெட்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டு-பிடித்தனர். இதன் மதிப்பு, 14 ஆயிரத்து, 740 ரூபாய். இது தொடர்-பாக கடைக்காரர் ஜாஸ்மின், 36, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் வில்லரசம்பட்டி முத்துமாணிக்கம் நகரில், 10 ஹான்ஸ் பாக்கெட் வைத்திருந்த பாக்கியம், 65, என்-பவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

