/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு
/
பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு
ADDED : மே 11, 2025 01:17 AM
நம்பியூர், நாம் தமிழர் கட்சி சார்பில், கோவையில் நடக்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக, நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். பேரூராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் வைத்துள்ளனர். இதனால் பேரூராட்சி ஊழியர்கள் பேனரை அகற்றினர். இதையறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கவேல், கருப்புசாமி, கந்தசாமி, முத்துக்குமாரசாமி ஆகியோர், பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை எடுத்து வந்த, நேற்று மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.
இதுகுறித்து நம்பியூர் போலீசில், பேரூராட்சி சார்பில் புகார் தரப்பட்டது. போலீசார் சென்று பேனரை அகற்றியபோது, நா.த.க., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நான்கு பேர் மீதும்,
நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

