/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டாசு பதுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு; எஸ்.பி., தகவல்
/
பட்டாசு பதுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு; எஸ்.பி., தகவல்
பட்டாசு பதுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு; எஸ்.பி., தகவல்
பட்டாசு பதுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு; எஸ்.பி., தகவல்
ADDED : அக் 26, 2024 07:56 AM
ஈரோடு: தீபாவளி பண்டிகைக்காக உரிய அனுமதி இன்றி, பட்டாசு பதுக்கிய, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு எஸ்.பி., ஜவகர் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக நடப்பு மாதம் மட்டும், 3,000 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனை செய்தவர்களின் வங்கி கணக்கை முடக்கியுள்ளோம். 'காவல் உதவி' செயலி மூலம், காவல் துறையின் உதவிகளை பெற போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதில் காவல்துறை சார்ந்த அனைத்து தகவல்-களும் இடம் பெற்றுள்ளன.மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு விற்பனை செய்தது, பதுக்கி வைத்திருந்தது என, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் ஜவுளி சந்தைக்கு அதிகமாக வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்-றனர். இதனால் எட்டு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்-கிறோம். தவிர, 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.