தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 770 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : பிப் 12, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மறியல் செய்த, 770 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவி சாவித்ரி தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலு-வலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மறியலில் ஈடுபட்ட, 194 பேர் கைது செய்யப்பட்டனர். சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.* தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கனி

ராவுத்தர் குளம் பிரிவில் மாவட்ட தலைவர் குருநாதன் தலை-மையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, 107 பேர் மீதும் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுரி சங்கர் தலைமையில் மறி-யலில் ஈடுபட்ட வருவாய் துறையினர், 344 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

* தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் மறியலில் ஈடுபட்ட, 125 பேர் கைதாகினர். அவர்கள் மீது சூரம்-பட்டி போலீசார்

வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us