/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயி-வனத்துறை 'மோதலில்' இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு
/
விவசாயி-வனத்துறை 'மோதலில்' இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு
விவசாயி-வனத்துறை 'மோதலில்' இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு
விவசாயி-வனத்துறை 'மோதலில்' இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு
ADDED : மே 20, 2025 02:00 AM
பவானிசாகர், பவானிசாகரை அடுத்த வெள்ளாளபாளையத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 50; கடந்த, 13ல், பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள மாசி கருவண்ணராயர் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பினார். காராச்சிக்கொரை வன சோதனை சாவடியில் நிறுத்திய வனத்துறை ஊழியர்கள், ரேஞ்சர் சதாம் உசேன் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்கிய ரேஞ்சர் மற்றும் ஆறு வனத்துறை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பவானிசாகர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல விவசாயி மாணிக்கம் மீது, பவானிசாகர் வனக்காப்பாளர் குப்புசாமி, வாகனத்தை ஓட்டி வந்த மாணிக்கம் மது போதையில் இருந்தார். தகாத வார்த்தை பேசி தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக, பவானிசாகர் போலீசில் புகாரளித்திருந்தார். இரு தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின்படி அடிப்படையில், ரேஞ்சர் சதாம் உசேன் மற்றும் ஆறு வனத்துறை ஊழியர் மற்றும் விவசாயி மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.