/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு
/
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 13, 2025 01:15 AM
ஈரோடு, நஈரோடு மாவட்டத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள், தமிழ் புலிகள் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
லக்காபுரம் கரட்டாங்காட்டை சேர்ந்த தொழிலாளி முருகேசன் சாவுக்கு காரணமான கந்தசாமி, கணபதி உள்ளிட்டோர் மீது, கொலை வழக்குப்பதிந்து கைது செய்ய கோரி தமிழ் புலிகள் கட்சியினர், நேற்று முன்தினம் ஈரோடு பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அக்கட்சியின், மாநில துணை பொதுச்செயலர் முகிலரசன் உள்ளிட்ட, 101 பேர் மீது அனுமதியின்றி பொது இடத்தில் ஒன்று கூடுவது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ், ஈரோடு ஜி.ஹெச் போலீசார் வழக்கு பதிந்தனர்.
* தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், 116 பேர் மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவர் மீதும் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் கோபி, தாளவாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

