/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் கையாடல்: மாநகராட்சி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
/
பணம் கையாடல்: மாநகராட்சி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பணம் கையாடல்: மாநகராட்சி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பணம் கையாடல்: மாநகராட்சி இளநிலை உதவியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 03, 2024 01:44 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தை, ஒரே நாளில் இருவருக்கு வாடகைக்கு விட்டு பணத்தை கையாடல் செய்து சிக்கிய, இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் மூலதனமாக வணிக நிறுவனங்கள், திருமண மண்படங்கள் உள்ளன. இதில், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே நாச்சியப்பா வீதியில் இரு திருமண மண்டபங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. திருமண மண்டபங்களில் பொதுமக்கள் திருமணம், வளைகாப்பு, காதணி விழா மற்றும் அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கு மாநகராட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்தும் நபரிடம் இருந்து, மண்டபத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிப்பர்.
தற்போது இரு திருமண மண்டபங்களில் மராமத்து பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, மாநகராட்சி பணிகள் நடந்து வருகிறது. இதற்காக திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரே நாளில் இருவருக்கு, மாநகராட்சி திருமண மண்டபத்தை வாடகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த புகாரிர்படி, மாநகராட்சி இளநிலை உதவியாளராக பணியாற்றிய கிருஷ்ணக்குமாரை, 32, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

