/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழா சந்தையில் குவிந்த கால்நடைகள்; மழையால் வியாபாரம் பாதிப்பு
/
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழா சந்தையில் குவிந்த கால்நடைகள்; மழையால் வியாபாரம் பாதிப்பு
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழா சந்தையில் குவிந்த கால்நடைகள்; மழையால் வியாபாரம் பாதிப்பு
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழா சந்தையில் குவிந்த கால்நடைகள்; மழையால் வியாபாரம் பாதிப்பு
ADDED : ஆக 08, 2024 06:44 AM
அந்தியூர்: அந்தியூர், குருநாதசுவாமி கோவில் தேரோட்ட விழாவை முன்-னிட்டு, நேற்று கால்நடை சந்தையில் குதிரை, கறவை மாடுகள், வேட்டை நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
ஆடிப்பெருந்தேர் திருவிழாவை தொடர்ந்து, கால்நடை சந்தை, பறவை கண்காட்சி, பொழுது போக்கு அம்சங்களுடன் பண்டிகை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதனால், பண்டிகை துவங்கிய நேற்று, கால்நடை சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள், கால்நடை சந்தை நடைபெறும் பகுதிக-ளுக்கு சென்று வர சிரமப்பட்டனர். அந்த பகுதிகளில் பொதுமக்-களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
அந்தியூரில் நடைபெறும் குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்-றது. இங்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று குதிரை, கறவை மாடுகள், நாய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் குதிரை, கறவை மாடுகளின் வியாபாரம் 'டல்' அடித்தது. சிறிய குதிரை, 30 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரையும், பெரிய குதிரைகள் 80 ஆயிரம் முதல், 10 லட்சம் ரூபாய் வரையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்நி-லையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்ததால், அந்த பகுதி முழுவதும் சகதிக்காடாக மாறியது. இதனால் கால்நடை சந்தை நடக்கும் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மேலும் ராட்-டின துாரிகள், பறவை கண்காட்சியை காண மக்கள் ஆர்வம் காட்-டவில்லை. மழையால் கால்நடை சந்தை வியாபாரம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.