ADDED : ஆக 02, 2026 06:42 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:நாளை
ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம்
காவிரி ஆற்று படித்துறை சேறு, சகதியா காட்சியளிக்கிறது.
இதுகுறித்து
பொதுமக்கள் கூறியதாவது: கருங்கல்பாளையம் காவிரி
ஆற்றங்கரையோரம் ஆதவன் மாதவன் வரதராஜ பெருமாள் கோவிலை ஒட்டி
படித்துறை உள்ளது. படித்துறையில் இருந்த மக்கும், மக்காத குப்பை
அகற்றப்பட்டது. ஆனால் படித்துறையை ஒட்டி சேறு, சகதியாக
காணப்படுகிறது. இதில் கால் வைக்கும் பட்சத்தில் மக்கள் வழுக்கி விழும்
நிலை தான் ஏற்படும். நாளை அதிகாலை முதலே மக்கள் படித்துறைக்கு
வரத்தொடங்குவர். சேறு, சகதியை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
