/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாயக்கழிவால் பச்சை நிறமான காவிரி நீர்குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் தவிப்பு

ADDED : மே 01, 2025 02:07 AM
பள்ளிப்பாளையம்::பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல், மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து, ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக வெளியேற்றுகின்றனர். அவை, நேரடியாக ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் குடிநீருக்கும் மட்டுமே ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரில், சாயக்கழிவுநீர், குடியிருப்பு கழிவுநீர் அதிகளவு கலக்கிறது. இதனால், ஆற்றுநீர் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. மீன் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சுத்திகரித்து
மக்களுக்கு வினியோகம் செய்தாலும், பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.கோடையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆற்று நீரையே மக்கள் முழுமையாக நம்பி உள்ளனர். ஆனால், பச்சை நிறமாக மாறிய தண்ணீரை குடிக்கலாமா? என, மக்கள் குழப்பத்தில் உள்ளனர். நிறம் மாறிய தண்ணீர், குடிக்க உகந்ததா என, பரிசோதனை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.