/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் 17 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
/
மாநகரில் 17 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
ADDED : ஜன 07, 2026 06:23 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் குற்றச்சம்பவங்களை கண்காணித்து தடுக்கும் விதமாக, 17 இடங்களில், 68 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்-டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: அகில்-மேடு வீதி, சத்திரோடு, மேட்டூர் ரோடு, வி.வி.சி.ஆர் நகர், கே.என்.கே.ரோடு, பழைய ரிஜிஸ்டர் ஆபீஸ் ரோடு, கமலாநகர், கே.ஏ.எஸ்.நகர், கிருஷ்ணம்பாளையம், ராஜாஜிபுரம், பழைய வேப்பமர டாஸ்மாக் கடை, கள்ளுக்கடைமேடு, நந்தி ஸ்கூல் சந்-திப்பு, மணல்மேடு, பாரதி தியேட்டர், வீரப்பன்சத்திரம் என, 17 இடங்களில் தலா நான்கு 'சிசிடிவி' கேமராக்கள் வீதம், 68 கேம-ராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் நிதியில் இப்-பணி நடந்துள்ளது. கேமராக்கள் மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்களை கண்காணிக்க, மாவட்ட காவல்துறை வசம் இன்று (நேற்று) ஒப்படைக்கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்-படும். இவ்வாறு கூறினர்.

