/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு
/
மயான பாதை ஆக்கிரமிப்பு அளவீட்டு பணியால் பரபரப்பு
ADDED : நவ 04, 2025 02:10 AM
அந்தியூர், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரையில், மயான பாதை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்,  தனிநபருக்கு வருவாய் துறை சாதகமாக நடப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் பிரச்னைக்குரிய பகுதியை நேற்று அளந்து எல்லை நிர்ணியிக்க, அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். டிஜிட்டல் அளவீடு கருவி மூலம் அளந்து முடித்தனர். மாலைக்குள் எல்லைக்கல் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வரைபடம் தயார் செய்தபின், எல்லை நிர்ணயம் செய்யப்படும் எனக்கூறி வருவாய் துறையினர் சென்றனர். இதனால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

