மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1ல் துவக்கம் 17 முதல் மக்கள் விபரங்களை உள்ளீடு செய்யலாம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆக.,1ல் துவக்கம் 17 முதல் மக்கள் விபரங்களை உள்ளீடு செய்யலாம்
ADDED : ஜூலை 07, 2026 05:41 AM
ஈரோடு; மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கலெக்டர் கந்தசாமி, ஈரோடு கலெக்டர் அலுவலக வளா-கத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெ-டுப்பு-2027 பணிகள் துவங்கப்பட்டு, முதற்கட்ட-மாக வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வீடுகள் தொகுப்பு பணிகள் ஆக., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது.இப்பணிக்காக பிரத்யேகமாக சி.எம்.எம்.எஸ்., என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் வரும், 17ம் தேதி முதல், 31 வரை மக்கள், தங்கள் சுய விபரங்களை தாங்களாகவே உள்ளீடு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்-டுள்ளது.
உள்ளீடு செய்ததும், ஒரு ஒப்புதல் எண் செய-லியில் வரப்பெறும். இந்த எண்ணை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் கணக்கெ-டுப்பு பணிக்காக வீடுகளுக்கு வரும்போது தெரி-வித்தால், அதை உறுதி செய்த பின், பதிவேற்றம் செய்ததை உறுதி செய்வர். ஆக., 1 முதல், 30 வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில், 3,376 கணக்கெ-டுப்பாளர், 595 மேற்பார்வையாளர் ஈடுபடுவர்.
