ADDED : ஜூலை 07, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி; கொடுமுடி கொளத்துபாளையம் ஊராட்சி ஆராம்பாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏழு நாட்களாக குடிநீர் வினி-யோகம் முறையாக செய்யாததால், ஈரோடு - -கரூர் பிரதான சாலை ஆராம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை, மறியலில் ஈடுபட்டனர்.
கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கொடுமுடி ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் பூஜா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
