ADDED : அக் 17, 2026 07:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுவினர், ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த ஜூலை முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய தபால் ஊழியர் சங்கம் மாவட்ட செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் முன், மாவட்ட செயலர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
