/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசின் 'நல் விருந்து' பள்ளிகளில் நிறுத்த உத்தரவு
/
மத்திய அரசின் 'நல் விருந்து' பள்ளிகளில் நிறுத்த உத்தரவு
மத்திய அரசின் 'நல் விருந்து' பள்ளிகளில் நிறுத்த உத்தரவு
மத்திய அரசின் 'நல் விருந்து' பள்ளிகளில் நிறுத்த உத்தரவு
ADDED : செப் 27, 2024 01:18 AM
மத்திய அரசின் 'நல் விருந்து'
பள்ளிகளில் நிறுத்த உத்தரவு
ஈரோடு, செப். 27-
மத்திய அரசு சார்பில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில், திதி போஜன் (நல் விருந்து) திட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
அதாவது மாதத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டும் இதை நடத்தி கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் முதல், இனி எந்த அரசு பள்ளியிலும், நல் விருந்து நடத்த வேண்டாம் என்று, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நேரம் என்பதால் நல் விருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.