ADDED : டிச 08, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவி-களின் போட்டோவை பரிசுடன், பள்ளி அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு ஈரோடு சி.இ.ஓ., மான்விழி அறிவுறுத்தியுள்ளார்.
மாநில, தேசிய விளையாட்டு போட்டிகளில் பரிசு வெல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை பெருமைப்படுத்தும் வகையில், அந்தந்த பள்ளிகளில் அவர்கள் பெற்ற பரிசுடன் அவர்கள் போட்-டோவை அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி-யுள்ளார்.

