/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர் பற்றாக்குறையால் தடுமாறும் சாணார்பாளையம் அரசு நடுநிலை பள்ளி

ADDED : டிச 24, 2024 02:13 AM
சென்னிமலை, டிச. 24-
சென்னிமலை யூனியன் வரப்பாளையம் ஊராட்சி சாணார்பாளையத்தில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 24 மாணவ, மாணவியர்; ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில், 50 பேர் என, 74 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் இல்லை. அவர் பணிமாறுதலில் சென்று விட்டார். தற்போது முதல் ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர், மற்ற மூன்று வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்களும் உள்ளனர். ஒருவர் பி.டி.ஏ., சார்பில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 74 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில், மூன்று நிரந்தர ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதித்துள்ளது. அரையாண்டு தேர்வே முடிந்து விட்ட நிலையில் பள்ளிக்கு ஒரு நிரந்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும். தேர்வு விடுமுறை முடிந்து ஜன.,2ல் மீண்டும் பள்ளி திறக்கப்படும். அதற்குள் ஆசிரியரை நியமிக்க பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.