ADDED : நவ 14, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று, மண்டப யாக திரவ்ய சுத்தி கலச பூஜை, 1,008 அர்ச்சனை, அத்யாய ஹோமம் நடந்தது. பிறகு சப்த கன்னிமார் சிறு குழந்தைகளுக்கு மாலை அணவித்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில் பவானி, குமாரபாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

