/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டட தொழிலாளி சாவு விசாரணையில் மாற்றம்
/
கட்டட தொழிலாளி சாவு விசாரணையில் மாற்றம்
ADDED : ஜூலை 11, 2025 12:59 AM
கோபி, கோபி அருகே ராமர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 52, கட்டட தொழிலாளி; கோபியை சேர்ந்த சீனிவாசன், 53; இவர் சலவை தொழிலாளி. கோபி வாய்க்கால்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே கடந்த, 8ம் தேதி மாலை மது அருந்தினர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், கிருஷ்ணசாமியை ஹாலோ பிளாக் கல்லால் தாக்கினார். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவு இறந்தார். இதுகுறித்த புகாரின்படி கொலை முயற்சி வழக்கில், கோபி போலீசார் சீனிவாசனை கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். கிருஷ்ணசாமி இறந்ததால், கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரிக்கின்றனர்.