/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்; 'தீபாவளி முடியும் வரை தொடரும்'
/
மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்; 'தீபாவளி முடியும் வரை தொடரும்'
மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்; 'தீபாவளி முடியும் வரை தொடரும்'
மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்; 'தீபாவளி முடியும் வரை தொடரும்'
ADDED : அக் 23, 2024 01:25 AM
மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்; 'தீபாவளி முடியும் வரை தொடரும்'
ஈரோடு, அக். 23-
ஈரோடு ப.செ.பார்க்கில் இருந்து, மணிக்கூண்டு செல்லும் சாலையில், போக்குவரத்து போலீசார் நேற்று திடீர் மாற்றம் செய்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், துணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி செல்ல பொதுமக்கள் ஈரோட்டுக்கு வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மாநகர கடைவீதி சாலைகளான ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, மணிகூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும், அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று மதியம் முதல், ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை டூவீலர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
பஸ், லாரி, கார், ஜீப், சரக்கு ஆட்டோ செல்ல அனுமதி மறுத்தனர். இதேபோல் மாநகர வாகன நெரிசலை தவிர்க்க கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
டூவீலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. கூட்ட நெரிசலை பொறுத்து அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். தீபாவளி முடியும் வரை இந்நிலை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.