/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
/
தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூன் 22, 2024 02:36 AM
ஈரோடு:மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்துஎஸ்.பி.,க்கு
முன்னதாகவே தகவல்களை தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேற்கொள்ளும் பணிகளை, எஸ்.பி.,யின் சிறப்பு தனிப்பிரிவு போலீசார்
செய்து வருகின்றனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஒன்பது பேர்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பவானி ஸ்டேஷன் முதல் நிலை காவலர் மனோ -
பவானி தனிப்பிரிவிலும், அந்தியூர் செந்தில்குமார் - ஆப்பக்கூடல்
தனிப்பிரிவுக்கும், வெள்ளித்திருப்பூர் ஸ்டேஷன் ராஜா - அந்தியூர்
ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
பர்கூர் சேகர் - அதே
ஸ்டேஷன் தனிப்பிரிவு ஏட்டாகவும், வெள்ளித்திருப்பூர் தினேஷ்குமார் -
அதே ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும், கோபி ஸ்டேஷன் கண்ணன் - அம்மாபேட்டை
தனிப்பிரிவுக்கும், அம்மாபேட்டை சந்தோஷ்குமார் - சித்தோடு
தனிப்பிரிவுக்கும், பவானி ஸ்டேஷன் சக்திவேல் - எஸ்.பி.,
அலுவலகத்துக்கும், சென்னிமலை பாலசுப்பிரமணியன் - எஸ்.பி.,
அலுவலகத்துக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.