ADDED : டிச 14, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம், படியூர், ஊதியூர், நத்தக்காடையூர், முத்துார், வெள்-ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதலே சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதனால் தேங்காய் உலர் களங்களில் பணி முற்றிலும் பாதிக்-கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தேங்காய் வெட்டும் பணியும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்-கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்கனவே உலர்த்துவதற்காக களங்களில் பரப்பப்பட்ட தேங்காய் பருப்பு, தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டது. கட்-டட தொழிலாளர், விவசாய பணியில் ஈடுபடுவோரும் தொடர் மழையால் வேலை வாய்ப்பை இழந்தனர்.
மழையால் பணிகளை செய்ய முடியாமல் வீடுகளில் முடங்-கினர். மக்கள் நடமாட்டம், டூவீலர்களும் அதிகளவில் இயங்கா-ததால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது.