/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விக்ரம சோழீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
/
விக்ரம சோழீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ADDED : மே 14, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அருகே கண்ணபுரத்தில், வித்தகச்செல்வி உடனமர் விக்ரம சோழீஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடக்கிறது.
நடப்பாண்டு விழா கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மே, 8ம் தேதி பொங்கல் விழா நடந்தது. சித்ரா பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர், ஊர் மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

