ADDED : நவ 12, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை -சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த அக்.,29ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இன்று காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவில் அம்மனுக்கு தீர்த்தாபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அதன் பின் காளிக்காவலசு, பனங்காடு, முருங்கத்தொழுவு பகுதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடக்கும்.
நாளை காலை, 7:20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, 8:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து பொங்கல் வைத்தும், ஆடு- கோழி பலியிட்டும் மக்கள் நேர்த்திகடன் செலுத்துவர்.
மாலையில் தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கிறது. 14ம் தேதி மதியம் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

