/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில ஜூடோ போட்டி அரசு பள்ளி சாதனை
/
மாநில ஜூடோ போட்டி அரசு பள்ளி சாதனை
ADDED : நவ 12, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025--26ம் ஆண்டு மாநில குடியரசு தின விழா விளையாட்டு போட்டி கரூர் மாவட்டத்தில் நடந்தது. இதில் ஜூடோ போட்டியில், ஈரோடு மாவட்டம் ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின், 8 மாணவர், 9 மாணவியர் பங்கேற்றனர்.
இளையோர் மாணவியர், 23 கிலோ எடை பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி தாரிகா, மூத்தோர் மாணவர், 40 கிலோ பிரிவில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் திவாகர் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.
பதக்கம் பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியை குணசுந்தரி, ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

