/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து முன்னணி சார்பில் சதுர்த்தி ஆலோசனை
/
இந்து முன்னணி சார்பில் சதுர்த்தி ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கவுந்தப்பாடி அருகே காஞ்சிக்கோவில் பிரிவில், இந்து முன்னணி சார்பில் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
கவுந்தப்பாடியில், 108 இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆக.,31ம் தேதி மாலை நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் பிரமாண்ட சதுர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும். பழைய ஊர்வல பாதையிலேயே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.